என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » lorry owners association
நீங்கள் தேடியது "Lorry Owners Association"
திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் புதிய தலைவராக சுந்தரராஜ், செயலாளராக சக்திவேல், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவராக கோபால், துணை செயலாளராக தஙகவேல், துணை பொருளாளராக அருள் முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் மேடை மண் (கிராவல்) அனுமதி சீட்டு இல்லாமல் சங்க உறுப்பினர்கள் டிப்பர் லாரிகளை இயக்க கூடாது. அரசு அதிகாரிகள் முறையான அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும். முறையான அனுமதி சீட்டு இல்லாத லாரிகளை எங்கள் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம். எடுக்கக்கூடிய மேடை மண் விலையை புதியதாக நிர்னயம் செய்வது. லாரியில் அளவு லோடு 3 யூனிட் என நிர்னயம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பெரிய நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், தடாகம், அன்னூர், மேட்டுப்பாளையம், இடிகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
×

X