என் மலர்
நீங்கள் தேடியது "lorry tube"
- போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி-பவுஞ்சிபட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது காவலர்கள் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது லாரி டியூப்களில் 80 லிட்டர் சாராயத்தை அடைத்து, அதனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சாராயம் கடத்தி வந்த நபர் குரும்பலூரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செயது செல்வமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.