search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low Hemoglobin"

    • ஹீமீகுளோபின் என்பது ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன்.
    • சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ரத்தசோகை.

    ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு ரத்த சோகை (anemia) என்று பெயர். இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி இரும்பு சத்து நிறைந்த சில உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அவை என்னென்ன பார்க்கலாம்.

    ரத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:

    ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும்.

    உடலில் இரும்புச்சத்து குறைவதால் உடலில் ரத்தத்தின் அளவு குறைகிறது. அதனால் காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    போலிக் அமிலம் என்பது பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். அதனால் பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், பிரக்கோலி, ஈரல் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மாதுளையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க மிகச்சிறந்த ஒன்றாகும். அதனால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.

    பேரிச்சம்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து இரும்புச்சத்தை அளிக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 3 பேரிச்சை பழமாவது சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

    பீட்ருட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்றவை உள்ளது. எனவே தினமும் பீட்ருட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

    பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும் உணவு வகைகள் ஆகும். அவற்றில் உள்ள இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது.

    ×