என் மலர்
நீங்கள் தேடியது "Luxury Car"
- ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
- லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்
ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.
இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
- மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது.
- இந்த காரில் 6.75 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கலினன் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்குகிறது. இதே காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ. 12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

கலினன் சீரிஸ் II மாடலில் மெல்லிய ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் புதிய தோற்றம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. இந்த காரின் சக்கரங்களும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இதே எஞ்சின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். முன்னாள் தனியார் வங்கி அதிகாரி. இவர் மீது நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெபரத்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்தார்.
அதில், “கமலக்கண்ணன் என்னிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவரை நம்பினேன். ஆனால் கமலக்கண்ணன், எனது பெயரில் பலகோடி மதிப்பில் நிலங்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 3 வங்கிகளில் கொடுத்து ரூ.1.83 கோடி கடன் வாங்கி உள்ளார். அந்த வங்கியில் இருந்து எனக்கு நோட்டீசு வந்த பிறகுதான் கமலகண்ணன் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் வங்கி அதிகாரியான கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் தொழிலுக்காக கடன் வாங்கி தருவதாகவும், கார் கடன் வாங்கி தருவதாகவும் மோசடி செய்து வந்ததும், மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
கொடைக்கானலில் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள பங்களா வீடு வாங்கி உள்ளார். 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் உல்லாச படகு ஒன்றையும் வாங்கி அந்தமான் தீவில் நிறுத்தி வைத்திருப்பதும் தெரியவந்தது.
தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் கமலக் கண்ணன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரூ.6.71 கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
தற்போது முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் சிக்கி உள்ளார். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலகண்ணனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது. #BankOfficer #CheatingCase

