search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madame Tussauds"

    • டெல்லியில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டது.
    • கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள் அந்த பெண்ணை அவதூறாக பேசி வருகின்றனர்.

    விளையாட்டு, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் பிரபலங்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அவ்வகையில், ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலைக்கு பெண் ஒருவர் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்தது.


    ஆனால் கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள், அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் எதிர்வினை குறித்து சிலர் கவலைப்பட்டதாகவும் தெரிகிறது.

    அவர் கிரிக்கெட் வீரரின் ரசிகை என தெரிகிறது. அவள் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்தபடி சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. #PriyankaChopra #WaxStatue
    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு, லண்டன் தவிர்த்து பல இடங்களிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில் வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு சிலைகளை வைக்கப்படுவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. 

    அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் முன்னாள் உலக அழகியும், உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டபோது அணிந்திருந்த சிவப்பு நிற உடையில் அந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


    மேலும் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ், நிச்சயதார்த்தத்தின் போது பரிசளித்த வைர மோதிரம் போன்ற ஒரு மோதிரமும் அந்த மெழுகு சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்வையிட்டு மகிழ்ந்த பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தளத்தில், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களிலும் கூட என்னுடைய மெழுகு சிலை விரைவில் வைக்கப்பட உள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளார். #PriyankaChopra #WaxStatue #MadammeTussauds

    சிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
    சிங்கப்பூர்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன. 

    இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு.

    சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், இங்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.

    இந்த மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள கைபேசி மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
    கையில் துடைப்பத்துடன் மகாத்மா காந்திக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #CleanIndia #PMModi #MadameTussauds
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற அருங்காட்சியகம் கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இங்கு, மகாத்மா காந்தி, பகத்சிங், நேதாஜி, அப்துல்கலாம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், டாம் குரூஸ், சல்மான் கான், சச்சின், கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இங்கு மெழுகு சிலை உள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கூறிய பரிந்துரை ஒன்றை அருங்காட்சியக நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம், 1.25 பில்லியன் மக்களை தூய்மை குறித்து ஊக்குவிக்கும் வண்ணம் மகாத்மா காந்தியின் கையில் துடைப்பத்துடன் இருக்கும் படி மெழுகு சிலை வைக்க வேண்டும் என மோடி, அருங்காட்சிய நிர்வாகிகளை கேட்டுள்ளார்.

    மேலும், காந்தி கையில் துடைப்பம் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை தான் அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    எனினும், மகாத்மா காந்தி கையில் நீண்ட குச்சி வைத்திருக்கும் படியான மெழுகு சிலையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படுகிறது. அதற்காக தனது அளவீடுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். #DeepikaPadunone #MadameTussauds
    உலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கவுரவிக்கும் விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது. 

    அதற்காக தனது அளவுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். அடுத்த ஆண்டு வைக்கப்பட இருக்கும் தனது சிலைக்கான அளவீடுகளை கொடுத்த பின்னர், தீபிகா படுகோனே பேஸ்புக் நேரலையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது,

    `மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. நான் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறேன். ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். நான் சிறு வயதாக இருந்த போது ஒரு முறை எனது பெற்றோருடன் மேடம் துஸ்ஸாத்துக்கு வந்திருக்கிறேன். அந்த நியாபகங்கள் இன்னமும் என் நினைவில் நிற்கின்றன. அப்படி இருக்க மேடம் துஸ்ஸாத்தில் தனது சிலையும் வைக்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். 



    இதற்கு முன்பாக, பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கு மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadunone #MadameTussauds

    இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #MadameTussaudsMuseum #Ramdev
    லண்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார். #MadameTussaudsMuseum #Ramdev
    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள விராட் கோலி சிலையின் காது பகுதி உடைந்துள்ளது. #ViratKohli #ViratKohliWaxStatue #MadameTussauds

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வரும் கேப்டன் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலையானது கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலையை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். 

    இந்நிலையில், விராட் கோலி சிலையின் காது பகுதி உடைந்துள்ளது. அப்பகுதியில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே அவரது சிலையின் காது பகுதி உடைய காரணம் என அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டநெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடைந்த காதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. #ViratKohli #ViratKohliWaxStatue #MadameTussauds
    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலை இன்று வைக்கப்பட்டுள்ளது. #viratkholi #MadameTussaudsDelhi
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

    இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்காக விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டன.


    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ரன் விராட் கோலியின் மெழுகு சிலையானது இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என்னுடைய சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி' எனக்குறிப்பிட்டிருந்தார்.

    மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், உசைன் போல்ட், கால்பந்து வீரர் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #viratkholi #MadameTussaudsDelhi

    ×