என் மலர்
நீங்கள் தேடியது "Magaamagam"
- மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
- அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.
மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.
தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.
தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.
ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.
இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.
- பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
- கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்
1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்
2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்
3. யம தீர்த்தம் -யம பயமில்லை
4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்
5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்
6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்
7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்
8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்
9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்
10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்
11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்
12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்
13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்
14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்
15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்
16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்
17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்
18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்
19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.