search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magaliyamman Temple"

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.
    • நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூரில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48ம் நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றுது.நிறைவாக தீபாராதனை நடைபெற்றது.மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.மண்டல பூஜையை தென் சேரி மலை ஆதீனம் முத்து சிவ இராமசாமி அடிகளார் தலைமையில், அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    ×