என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
    X

    மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×