search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maggi"

    • தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன.
    • சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த சிற்றுண்டியாக நூடுல்ஸ் மாறி வருகிறது. தெருவோரங்களில் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வகைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு.

    அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் தெருவோர வியாபாரி ஒருவர், காபி மற்றும் பாலுடன் மேகி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அதில் அந்த வியாபாரி ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதில் மேகி நூடுல்ஸ் சேர்க்கிறார். தொடர்ந்து தக்காளி, கேரட், வெங்காயம், மேகி மசாலா, காபி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து புது வகையில் நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் இந்த உணவு தயாரிப்பை விஷம் என விமர்சித்துள்ளனர்.

    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு முட்டை சேர்த்து சூப்பரான மேகி முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    மேகி பாக்கெட் - 1
    ப.மிளகாய் - 2
    முட்டை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    சிக்கன் மசாலா - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மேகி மசாலா சேர்க்கவும்.

    அடுத்து அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    மேகி நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்

    சூப்பரான மேகி முட்டை மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×