என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mahendran"
- சினிமாவை நினைத்து பயந்ததாக தெரிவித்தார்.
- முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார்.
பீப்பிள் புரோடக்ஷன் ஹவுஸ் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், என்.வி. கிரியேஷன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்கும் அமீகோ கேரேஜ் என்ற படத்தை இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மகேந்திரன் சினிமாவை நினைத்து பயந்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார்."
"முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி," என்று தெரிவித்தார்.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
- அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் அமிகோ கேரேஜ் என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார்.
- இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமானவர். தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள் வெப் சீரியசில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து, அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் 'அமிகோ கேரேஜ்' என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார். மகேந்திரனின் நடிப்புப் பயணத்தில் அமிகோ கேரேஜ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் படக்குழு கூறுகிறது.
இந்தப் படம் கேங்ஸ்டர் இளைஞரின் வாழ்க்கையை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.
அமிகோ கேரேஜ் திரைப்படத்தை பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அறிண்டம், அர்த்தம், கரா, ரப்பப்பரி ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கின்றன.
- இயக்குனர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரிப்பப்பரி’.
- இப்படத்தில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'.மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
AK THE TALESMAN நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு திவாரகா தியாகராஜன் இசையமைக்க தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில், மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த பின்பு தான் நிறைய திறமை உள்ளவர்கள் இந்த படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன். அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.
சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இயக்குனர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்று கூறினார்.
இயக்குனர் அருண் கார்த்திக் பேசியதாவது, முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள்.
அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் இந்தப்படம் மூலம் சகோதரராக கிடைத்துள்ளார். எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார், அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம் என்று கூறினார்.
- சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து சாக்கடை வடிகால், ஆழ்குழாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் அருகே துங்காவியில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் தேவை என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதே ஊராட்சியில் சீலநாயக்கன்பட்டியில் பொது சுகாதார கழிப்பிடம் கட்ட ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், சாக்கடை வடிகால் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன்,துணைத் தலைவர் பொன்னுத்தாயி, மடத்துக்குளம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எஸ்.காளீஸ்வரன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் மகேந்திரனுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #Makkalneedhimaiam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்