search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra Car"

    • மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் குறித்து சுஷாந்த் மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம் என்று ஆனந்த் மஹிந்திரா பதில்

    மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள், அதன் வடிவமைப்புகள் மற்றும் ஊழியர்களை விமர்சித்து சுஷாந்த் மேத்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மஹிந்திரா நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள கார்கள், சர்வீஸ் சென்டர்கள், உதிரிப் பாகங்கள் பிரச்சனைகள், பணியாளர்களின் நடத்தைகள் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை முதலில் சரிசெய்யுங்கள்.

    உங்கள் கார்களின் தோற்றம் ஹூண்டாய் காரின் அழகின் அருகில் கூட வரவில்லை. உங்களது டிசைன் டீம் அல்லது உங்களுக்கே இவ்வளவு மோசமான ரசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மஹிந்திராவும் டாடாவும் உலகிற்கு புதிய மாருதி மற்றும் ஹூண்டாய் ஆக முடியும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன் மற்றும் விரும்புகிறேன் ஆனால் இதுவரை ஏமாற்றம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவில் ஸ்க்ரீன்ஷாட்டை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சுஷாந்த் மேத்தாவிற்கு பதில் அளித்துள்ளார்.

    ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், சரியாகச் சொன்னீர்கள் சுஷாந்த். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

    நான் 1991 இல் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் கார் வணிகத்தை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியது. ஏனெனில் வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.

    20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம். வெற்றி பெறுவதற்கான எங்கள் பசியைத் தூண்டுவதற்கு உங்கள் பதிவை போலவே எங்களை சுற்றியுள்ள இழிவான தன்மை, சந்தேகம், முரட்டுத்தன்மையை பயன்படுத்தியுள்ளோம்

    ஆம், நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். அதற்குள் எந்த மனநிறைவுக்கும் எங்களிடம் இடமில்லை, தொடர்ச்சியான முன்னேற்றம் நமது மந்திரமாகத் தொடரும். ஆனால் அதே சமயம் எங்கள் வயிற்றில் நெருப்பை ஊட்டியதற்கு நன்றி" என்று பதில் அளித்துள்ளார்.

    • முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV 3XO காம்பாக்ட் SUV மற்றும் XUV.e8 இன் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அடுத்ததாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து கதவுகள் கொண்ட தார் ராக்ஸ்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மஹிந்திரா தனது SUV வரிசையை ஒருங்கிணைக்கிறது.

    1. மஹிந்திரா XUV 3XO EV:

    ஐந்து இருக்கைகள் XUV 3XO அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் ICE வேரியண்டில் இருந்து ஏராளமான அம்சங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சி வடிவ எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், புதிய ஒய் வடிவ அலாய் வீல்கள், வலது முன்பக்க ஃபெண்டருக்கு மேல் சார்ஜிங் போர்ட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்ட ஃபுளோடிங் ரக 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் ஆடியோ, டூயல்-ஜோன் ஆகியவை வழங்கப்படுகிறது. தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, EPB (எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்) ஆட்டோ ஹோல்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா XUV 3XO EV ஆனது பிரபலமான Tata Punch EV மற்றும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் டாடா நெக்சான் EVயின் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும். இது 34.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். XUV 400, முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கார் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

    2. மஹிந்திரா XUV.e8:



    INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும். இது ஒரு பெரிய 80 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டிருக்கும், இது 550 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச்-ஐ வழங்கும். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

    மஹிந்திரா XUV.e8 ஆனது வரவிருக்கும் நடுத்தர அளவிலான மின்சார SUVகளான ஹுண்டாய் கிரெட்டா EV, மாருதி சுசுகி eVX, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா கர்வ் EV, எம்ஜி வின்ட்சர் EV, எம்ஜி ZS EV மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்றவற்றுடன் நேருக்கு நேர் மோதும். இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும்.

    • மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
    • இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி சந்தையில் தனது மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் சமயத்தில் XUV700 காரின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது. மஹிந்திரா XUV700 AX7 விலை இப்போது ரூ.19.49 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.24.99 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. இந்த சிறப்பு விலைகள் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    AX7 டீசல்-AT 7-சீட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. AX7 L டீசல்-MT 7-சீட்டர் விலை ரூ.1.50 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு XUV700 விற்பனையை மேலும் அதிகப்படுத்த உதவிகரமாக இருக்கும்.

    AX7 மற்றும் AX7 L டிரிம்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. உதாரணமாக, AX7 பதிப்புகளில் பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 1 ஆண்டு இலவச Adrenox சந்தா, TPMS, முழு-எல்இடி விளக்குகள், 18-இன்ச் அலாய் வீல், ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.


    சோனியின் 3டி ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட்-வியூ மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரியர் எல்இடி சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களை AX7 L கொண்டுள்ளது.

    மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதாவது 200hp பவர் கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் அல்லது 185hp வழங்கும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின்களில் XUV700-ஐ வாங்கலாம்.

    இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் எஞ்சின் AT கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனைப் பெறுகிறது. மஹிந்திரா சமீபத்தில் XUV700 இன் 2,00,000 யூனிட் உற்பத்தி மைல்கல்லைக் கொண்டாடியது.

    ×