search icon
என் மலர்tooltip icon

    கார்

    Mahindra Car
    X

    2 EV மாடல்கள், ஃபுல் ஃபார்மில் ரெடியாகும் மஹிந்திரா

    • முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV 3XO காம்பாக்ட் SUV மற்றும் XUV.e8 இன் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அடுத்ததாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து கதவுகள் கொண்ட தார் ராக்ஸ்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மஹிந்திரா தனது SUV வரிசையை ஒருங்கிணைக்கிறது.

    1. மஹிந்திரா XUV 3XO EV:

    ஐந்து இருக்கைகள் XUV 3XO அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் ICE வேரியண்டில் இருந்து ஏராளமான அம்சங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சி வடிவ எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், புதிய ஒய் வடிவ அலாய் வீல்கள், வலது முன்பக்க ஃபெண்டருக்கு மேல் சார்ஜிங் போர்ட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்ட ஃபுளோடிங் ரக 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் ஆடியோ, டூயல்-ஜோன் ஆகியவை வழங்கப்படுகிறது. தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, EPB (எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்) ஆட்டோ ஹோல்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா XUV 3XO EV ஆனது பிரபலமான Tata Punch EV மற்றும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் டாடா நெக்சான் EVயின் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும். இது 34.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். XUV 400, முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கார் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

    2. மஹிந்திரா XUV.e8:



    INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும். இது ஒரு பெரிய 80 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டிருக்கும், இது 550 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச்-ஐ வழங்கும். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

    மஹிந்திரா XUV.e8 ஆனது வரவிருக்கும் நடுத்தர அளவிலான மின்சார SUVகளான ஹுண்டாய் கிரெட்டா EV, மாருதி சுசுகி eVX, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா கர்வ் EV, எம்ஜி வின்ட்சர் EV, எம்ஜி ZS EV மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்றவற்றுடன் நேருக்கு நேர் மோதும். இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும்.

    Next Story
    ×