search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mailam Murugan Kovil"

    • கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது.
    • எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது.

    பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது.

    கோவிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான்.

    தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார்.

    அப்போது ''என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ''மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும்.

    தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!'' என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான்.

    'மயூரா சலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    இந்த கோவிலில் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.

    செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரம் 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது.

    இந்த நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராமாள பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    ×