என் மலர்
நீங்கள் தேடியது "major ravi"
- படத்தின் வில்லனாக சுரேஷ் மேனன் நடித்துள்ளார்.
- தினேஷ் ஆண்டனி படத்திற்கு இசையமைக்கிறார்.
வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'நாற்கரப்போர்.' இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி.கே. படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன்.
தற்போது இப்படத்தின் டைட்டில் லுக், பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பட ரிலீசுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.