என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makaravilakku"

    • இரு சீசன்களிலும் மொத்தம் 53 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
    • ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

    கோவில் நடை திறக்கப் பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். இதனால் மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரி மலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. பக்தர்கள் நெரிசல் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

    மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய் தார்கள்.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்டனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு இன்று நிறைவுக்கு வந்தது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.

    மகர விளக்கு வைப வத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண் மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.

    அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூ திரி, ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்தார்.

    பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.

    பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.

    பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதி நிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.

    பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வருகிற 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இந்த இரு சீசன்களிலும் மொத்தம் 53லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நாளை மாலை 6.35 மணிக்கு நடைபெறுகிறது. #Sabarimala #Makaravilakku
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.

    இவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலை கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

    அன்று முதல் சுவாமி அய்யப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நாளை 14-ந்தேதி மாலை 6.35 மணிக்கு நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.

    மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

    இந்த முறை சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நவீன கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    மகரவிளக்கு பூஜையின்போது பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். இந்த திருவாபரண ஊர்வலம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று பகல் சபரிமலை நோக்கி புறப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கக் கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர். வழி நெடுக பக்தர்களின் வரவேற்புடன் நாளை மாலை திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும்.

    அதன் பிறகு 18-ம் படி வழியாக திருவாபரணம் கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். மகரவிளக்கு பூஜையையொட்டி நாளை பகல் பூஜைக்கு பின்னர் பக்தர்கள் 18-ம்படி ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் 18-ம்படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 18-ந்தேதி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். அன்றுடன் நெய் அபிஷேகம் நிறுத்தப்படும். 19-ந்தேதி இரவு வரை சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். #Sabarimala #Makaravilakku
    ×