என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Malayalam actor"
- ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
- 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார்.
மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர் மேகநாதன் காலமானார். அவருக்கு வயது 60. சுவாசக் கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், பிரபல மலையாள நடிகர் பாலன் கே நாயர் மற்றும் சாரதா நாயர் ஆகியோருக்கு மூன்றாவதாக பிறந்தவர். மேகநாதன் 1983 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'அஷ்த்ரம்' மூலம் நடிகராக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். அவரது பன்முகத்தன்மைக்கு அங்கீகாரம் பெற்றார்.
மேகநாதன் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, கோவையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றார். பின்னர் நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரைத்துறையில் பணியாற்றினார்.
மேகநாதனுக்கு மனைவி சுஸ்மிதா மற்றும் மகள் பார்வதி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித்துடன் ‘வீரம்’ என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா.
- இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
அஜித்துடன் 'வீரம்' என்ற படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலா. ரஜினியுடன் அண்ணாத்த, காதல் கிசு கிசு, கலிங்கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற பெண் மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பாலா மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், " என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக கூறி வருகிறார். அவர் என்னை நேசிக்க சின்ன காரணம் கூட இல்லை. என்னையும், என் அம்மாவையும் குடித்து விட்டு டார்ச்சர் செய்ததுதான் கண் முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் என்னால் அம்மாவுக்கு உதவ முடியவில்லை. என் மீது உண்மையில் பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கிடாதீங்க" என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "மகளே என்னை அப்பா என்று அழைத்ததற்காக நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. மகளுடன் வாக்குவாதம் செய்பவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும் போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறி இருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்யாமல் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன். நன்றாக படித்து வளர வாழ்த்துக்கள்" என்று கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
- கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக கேரளாவின் முன்னணி நடிகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக கேரள சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டே கேரள அரசிடம் சமர்ப்பித்தது.
ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிடாமல் வைத்திருந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அரசு வெளியிட்டது.
அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பரபரப்பு தகவல்கள் இடம் பெற்று இருந்தன. பட வாய்ப்புக்காக நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள்தான் அதிகளவில் நடிகைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. நீதிபதி ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிபதியின் அறிக்கை வெளியான நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா கேரள இயக்குனர் ரஞ்சித் மீதும், ரேவதி சம்பத் என்ற நடிகை நடிகர் சித்திக் மீதும், மெஸ்சா என்ற காஸ்டிங் கலைஞர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான முகேஷ் மீதும், ஜூபிதா என்ற நடிகை, நடிகர் சுதீஷ் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
இதையடுத்து கேரள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.
இந்தநிலையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெய சூர்யா, இடவேலா பாபு, மணியன்பிள்ளை ஆகியோர் மீது கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறினார். ஆனால் நடிகர் முகேஷ் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடிகர் மணியம்பிள்ளை தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியுள்ளார். தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்களை கேரள கம்யூனிஸ்டு அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம் சாட்டினார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று கொல்லத்தில் உள்ள நடிகர் முகேஷ் வீட்டுக்கு மகளிர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். முகேஷ் வீட்டை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கோஷமிட்டு நீண்ட நேரம் தர்ணா செய்தனர். இது கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மேலும் 3 நடிகைகள் தாங்கள் நடிக்க சென்ற போதும், நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர். அவர்களில் பிரபல நடிகை கீதாவிஜயனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீதா விஜயன் டைரக்டர் துளசிதாஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். துளசிதாசால் தனக்கு பாலியல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என்றாலும் அதன் பிறகு அவர் தனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் செய்தார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் அஞ்சலி அமீர், சோபியா நடிகைகளும் பரபரப்பு பாலியல் புகார்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக மலையாள பட உலகில் பாலியல் புகார்கள் சூறாவளி புயல் போல் வீசத் தொடங்கி உள்ளது.
இதற்கிடையே ஹேமா அறிக்கையின் அடிப்படையிலும் பாலியல் புகார்களை தெரிவிக்கும் நடிகைகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள மாநில அரசு அமைத்து உள்ளது.
இந்த விசாரணை குழுவினர் இன்று (செவ்வாயக் கிழமை) தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நடிகைகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த ஆதாரங்களை திரட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு மலையாள நடிகர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
- நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து, நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ், இடைவேளை பாபு, ஜெயசூர்யா, மணியன் ஆகிய 4 பேர் மீது மலையாள நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் தெரவித்துள்ளார்.
தொடர் பாலியல் புகார்களை அடுத்து, கேரள அரசு சார்பில் ஐ.ஜி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகைகளிடம் இருந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
- 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
- ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.
இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்
இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-
மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.
மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.
கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
காதலுக்கு மரியாதை என்ற தமிழ் சினிமாவில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சினிமா முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல கேரள சினிமா நடிகர் குஞ்சாக்கோ பாவன் நடித்திருந்தார். அதன்பின்னர் 50-க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்.
சம்பவத்தன்று கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புகாக எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் குஞ்சாக்கோ பாவன் அருகே வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். வாலிபரின் செயலை பார்த்த குஞ்சாக்கோ பாவன் அதிர்ச்சியடைந்தார். அந்த வழியே வந்த பொதுமக்கள் வாலிபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் கண்ணூர் ரெயில் வந்ததும் குஞ்சாக்கோ பாவன் ரெயில் ஏறி படப்பிடிப்புக்கு புறப்பட்டார். கண்ணூர் ரெயில் நிலையம் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார் என்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் எர்ணாகுளம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் ரெயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா கட்சி பதிவுகளை வைத்து வாலிபரை தேடினர்.
இந்நிலையில் நேற்று அந்த வாலிபரை ரெயிவே போலீசார் கைது செய்தனர். நடிகர் குஞ்சாக்கோ பாவனை கொலை செய்ய முயன்றது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
இந்தநிலையில் கோழிக்கோட்டில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் மலையாள நடிகர் ஜாய்மேத்யூ என்பவர் பங்கேற்றார். அவர்கள் ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மிட்டாய் தெரு வழியாக சென்றது. அந்த பகுதியில் ஊர்வலம் நடத்த ஏற்கனவே போலீஸ் தடை உள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதி வழியாக ஊர்வலம் சென்றதால் நடிகர் ஜாய் மேத்யூ உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது பற்றி நடிகர் ஜாய்மேத்யூ கூறும்போது, என்னை மிரட்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். நாங்கள் ஊர்வலம் நடத்திய பாதை போலீஸ் தடை விதிக்கப்பட்ட இடம் என்பதை யாரும் தெரிவிக்கவில்லை என்றார். #KeralaNun #JoyMathew
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்