என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malegaon Blast"

    • மசூதி அருகே குண்டுவெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்டோர் மீது விசாரணை நடந்து வந்தது.

    பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், இதனை விசாரிக்கும் NIA சிறப்பு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட இருந்த நிலையில் நீதிபதி ஏ.கே.ரோஹதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே செப்டம்பர் 29, 2008 அன்று மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பாஜக தலைவர் பிரக்யா தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து வந்தது. பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே. லஹோட்டி மாவட்ட நீதிபதிகளின் வருடாந்திர பொது இடமாற்ற நடவடிக்கையின்கீழ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஹோட்டி மற்றும் பிற நீதிபதிகளுக்கான இடமாற்ற உத்தரவு, மும்பை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்டது. 

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கடைசி விசாரணையில், நீதிபதி லஹோட்டி, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள வாதங்களை முடிக்குமாறு அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 16 இல் அவர் தீர்ப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இடமேற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 17 வருடத்தில் இந்த வழக்கு விசாரணையில் 5 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    • மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
    • உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #MalegaonBlast #ColPurohit
    மும்பை:
        
    மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



    இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.

    2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

    அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகிய மூவர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

    சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். #MalegaonBlast #ColPurohit
     
    ×