search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malligarjuna Kharge"

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • ரெயில் விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
    • உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது.

    இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மோடி அரசில் ரெயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் ரெயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ரெயில் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விபத்து குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உ.பி.யில் சண்டிகர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மோடி அரசு எப்படி முறையாக ரெயில் பாதுகாப்பை சீர்குலைத்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் இருக்கும்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நடக்கக் காத்திருந்ததாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

    தானியங்கி சமிக்ஞையின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் லோகோ பைலட் மற்றும் ரெயில் மேலாளருடன் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவை ஆய்வு அறிக்கையில் மோதலுக்கு சில காரணங்களாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர், சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்.

    எங்களின் ஒரே கோரிக்கை:

    மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் எதிர்ப்பு மோதல் அமைப்பு விரைவாக நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×