என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Malsha Sharif"
- மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
- மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.
மாலே:
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.
இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.
இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.
- மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது
இதனை தொடர்ந்து, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மூன்று அதிகாரிகளும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்