search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimegalai Award"

    • ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கபட உள்ளது.

    விருது பெற தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

    வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் சுய உதவிக்குழுக்கள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கான விண்ணப்பத்தினை வருகிற ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துதல், குழுவின் சேமிப்பு தொகை முறையாக செலவிடப்படுதல், வங்கியில் கடன் பெறுதல், குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கை களில்ஈடுபடுதல், திறன் வளர்ப்பு பயிற்சி, வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சி மற்றம் சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகளை ஈடுபடுத்துதல் ஆகிய 6 காரணிகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்யப்படும் . மேலும் தகுதியான குழு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
    • தகுதியான அமைப்புகள் தங்கள் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

    தென்காசி:

    தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

    அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள் சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம் நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • வருகிற 31-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மணிமேகலை விருதுக்கு மகளிர் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    ஊரகப் பகுதிகளில் சிறப் பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மக ளிர் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்ட மைப்புகள் மற்றும் நகர அள விலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மாநில மற் றும் மாவட்ட அளவில் மணி மேகலை விருதுகள் வழங்கப் பட உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 லட்சம், வட்டார அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1 லட்சம், நகரப் பகுதிக ளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட் சம், பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப் பிற்கு ரூ.5 லட்சம், மாவட்ட, அளவில் சிறப்பாக செயல் படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊராட்சி அளவிலான கூட் டமைப்பிற்கு ரூ.1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம், நகரப் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை யாக வழங்கப்பட உள்ளது.

    எனவே சிறப்பாக செயல்படும் அமைப்புகளிடம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. தகுதி வாய்ந்த அமைப் புகள், தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, நகராட்சி அல்லது பேரூ ராட்சி அலுவலகங்களில் செயல்படும் மகளிர் திட்டப் பிரிவில் வருகிற 31-ந் தேதிக் குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    வங்கி கடன் குறைந்தபட்சம் 3 முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 அலுவலக நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.

    சிறந்த ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்காக விருது பெற, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

    சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் விருது பெற, விண்ணப்பிக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

    சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு விருது பெற, சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்பு விருது பெற, அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயஉதவிக்குழுக் களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

    சிறந்த நகர அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற, நகர அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும்.

    2022-2023-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கு தகுதியான குழுவினர் வருகிற ஏப்.25-ம் தேதிக்குள், அதற்கான விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
    • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,௦௦௦ வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:.26-

    கடலூர் கலெக்டர் பால சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்பு கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்பு கள், நகர அளவி லான கூட்டமைப்பு களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. 

    2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு ரூ.1,00,000, ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, வட்டார அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000, நகரப் பகுதி களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000, பகுதி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, மாவட்ட அள வில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000, நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.1,00,000 - மும் வழங்கப்பட உள்ளது.

    எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி களை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் விண்ணப்ப ங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு நாளை (27-ந் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மணி மேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெற லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×