search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor"

    • உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும்.
    • அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் மன்சூர் (42) என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தவித்து வருகிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.

    உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும். உயிரிழந்த 16 பேரில் தாய், மனைவி, தங்கை, மகனின் உடல்கள் மட்டுமே தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டபோது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

    "இந்த நிலச்சரிவு என் ஒட்டுமொத்த உலகத்தையும் அடித்து சென்றுவிட்டது. என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தும் என்னை விட்டு சென்று விட்டது" என்று தன் கும்பத்தை இழந்து தவித்து வரும் மன்சூர் பெரும் சோகத்தோடு தெரிவித்தார்.

    ×