என் மலர்
நீங்கள் தேடியது "Mantra"
- திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
- சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய் வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிக்கிழமை அன்று நாம் விசேஷமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வழிபடும் போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் என்ன என்று பார்க்கலாம்...
ஆன்மிகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பட்ட தெய்வங்களை விசேஷமாக வழிபடுவது வழக்கம். இருப்பினும் நாம் தினமும் அனைத்து தெய்வங்களுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட அன்றை நாள் கூடுதல் விசேஷமாகும்.
விநாயகர்
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
சிவன்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
அம்பாள்
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
அருள்வாய் அபிராமியே!

விஷ்ணு
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
முருகன்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

நவகிரகம் : வெள்ளி/சுக்ரன்
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
- சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும்.
- 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான மந்திரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பலவிதமான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். பார்க்க கூடியவர்கள் அனைவரும் ஏன் இன்னும் வரன் அமையவில்லையா என்று கேட்டு மனதை புண்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஜாதகத்தை பார்ப்பார்கள். ஒவ்வொரு ஜாதக காரரை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் செய்யலாமா அல்லது ஏதும் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்பார்கள்.இதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும். அவை என்ன மந்திரம் என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

மேஷம், விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
ரிஷபம், துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வர வேண்டும்.
மிதுனம், கன்னி
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர திருமண தடை நீங்கும்.
கடகம், சிம்மம்
கடகம், சிம்மம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வரவும்.
தனுசு, மீனம்
தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வர வேண்டும்.
மகரம்
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கும்பம்
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
- இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
- இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.
திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது என்று கூறுவார்கள். கல்லடி பட்டாலும் படலாம். ஆனால் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு திருஷ்டி என்பது ஏற்படும். இதனை போக்குவதற்கு தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிக்கும் முறை என்று செய்து வந்தார்கள். கல் உப்பு, வர மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் என பல பொருட்களை கொண்டு மந்திரம் திருஷ்டி கழிப்பார்கள். அப்படி திருஷ்டி கழிக்கும் போது ஒரு மந்திரத்தை கூறுவார்கள்.
அந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்கும் போது எந்த விதமான திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும்.
திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம்:
பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ
பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ
பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ
உங்கள் குடும்பத்தில் திருஷ்டி அதிகமாக உள்ளவர்களை கிழக்கு பார்க்க உட்கார வைத்து உப்பு, வர மிளகாய் மற்றும் கடுகு கொண்டு தலையை இடது புறமாக மூன்று முறையும், வலது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது இந்த மந்திரத்தை மூன்று கூற வேண்டும். அதன் பிறகு, திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போட்டு விட வேண்டும். இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
மேலும், நீங்கள் எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிக்கும்போது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்க வேண்டும்.
மஞ்சள் வர்ண புளித்த மாரி!
ரத்த வீர ராசா கன்னி,
மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!
இவ்வாறு நீங்கள் திருஷ்டி கழிக்கும்போது இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.
- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.
அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.
ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
- என்றோ அல்லது அழகு தமிழில்
ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
அழகன் அண்ணா கணேஸ்வரா!
ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
என்றும் மங்களம் கணேஸ்வரா!
பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ
- ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
- தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.
இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
- ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன்.
- இந்த மந்திரத்தை 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
திங்கட்கிழமை அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்த தினம் மட்டுமல்லாமல் சந்திரனின் வழிபாட்டுக்கும் மிகவும் உகந்த தினம். அதனால் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.
திங்கட்கிழமைகளில் சொல்ல வேண்டிய சந்திரன் ஸ்லோகம்
'பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்'
இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜை அறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளி தரும்.
- ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று நம்முடைய புராணங்கள் கொண்டாடுகின்றன.
- இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.
ஐயப்பனை வணங்கி காயத்ரி மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வந்தால் மன வலிமை அதிகரிக்கும். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். ஐயப்ப மலைக்கு மாலை போட்டவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே இந்த மந்திரத்தை சொல்லலாம். தினமும் சொல்ல முடியாவிட்டாலும் புதன் கிழமைகளில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்முடன் துணையாக இருந்து நம்மை ஐயப்பன் காத்தருளுவார்.
தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.
சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரத்தை ஜெபித்து வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். ஐயப்பன் அருளையும் ஆசியையும் வளத்தையும் அள்ளித் தருவார்.
மகா மந்திரம்:
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
- இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
- உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும்.
ஓம் வெங்கட நாதாய வித்மஹே
ஸச் சித்தானந்தாய தீமஹி
தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்
ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.
இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.