என் மலர்
நீங்கள் தேடியது "Manufacture of free clothing"
- அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
- டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி அளிக்கும் மையங்கள் பல உள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லூரி தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. 2019 முதல் 2023 வரை 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க நிப்ட் -டீ கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்தது. இதுவரை 900 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. உணவு சீருடை, தங்குமிடம், கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்கள், நிப்ட் டீ பயிற்சி மையத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி பெற்றுவருகின்றனர்.இந்நிலையில்திருப்பூர், அவிநாசி, தாராபுரம், ஊத்துக்குளி, மூலனூர்ஆகிய 5 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகள் நிப்ட்-டீ கல்லூரியை அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து நிப்ட்- டீ கல்லூரி திறன் பயிற்சி மைய தலைவர் கண்ணன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி அளிக்கும் மையங்கள் பல உள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் பயிற்சி அளிக்க குறிப்பிட்ட ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிப்ட் - டீ கல்லூரிமையத்தில் மேலும் 300 முதல் 350 பேருக்கு பயிற்சி அளிக்க முடியும்.அதனாலேயே அதிகபட்சமாக நிப்ட் -டீ கல்லுாரிக்கு ஐந்து ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அப்பகுதிகளுக்கு சென்று ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த இலவச பயிற்சிகள்,பயிற்சிக்குப்பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு,சுய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ஐந்து ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் 80563 23111 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு இலவச ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சிகளில் இணையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.