என் மலர்
முகப்பு » Maria Bueno
நீங்கள் தேடியது "Maria Bueno"
பிரேசிலின் டென்னிஸ் ராணி என்று அழைக்கப்பட்ட மரியா பியூனோ உடல் நலக்குறைவால் தனது 78 வயதில் காலமானார். #MariaBueno
பிரேசில் நாட்டின் டென்னிஸ் ராணி என்று அழைக்கப்பட்டவர் மரியா பியூனோ. இவர் 1939-ம் ஆண்டு சாவோ பாவுலோவில் பிறந்தார். தனது 19 வயதில் இத்தாலி சாம்பியன்சிப்ஸ் தொடரில் முன்னணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனால் மூலம் உலகப்புகழ் பெற்றார். அத்துடன் தென்அமெரிக்காவின் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தார். இந்த சாம்பியன் பட்டத்தை வென்றதும், ‘‘நான் விளையாடுவது ஒவ்வொருவரும் அச்சமாக இருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய மரியா பியூனோ கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் 1959, 1960 மற்றும் 1964-ல் விம்பிள்டனையும், 1959, 1963, 1964, 1966-ல் அமெரிக்க ஓபனையும் கைப்பற்றியுள்ளார். மேலும், இரட்டையர் பிரிவில் ஐந்துமுறை விம்பிள்டனையும், நான்குமுறை அமெரிக்க ஓபனையும், தலா ஒருமுறை ஆஸ்திரேலியா, பிரெஞ்ச் ஓபனையும் கைப்பற்றியுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் 1960-ல் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார்.
78 வயதான இவர் கடந்த ஆண்டு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

×
X