search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage Fraud Arrest"

    • டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அதேநேரத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்தது அந்த டாக்டர் கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார்.

    அப்போது ஒரு கும்பல் அவரிடம் காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த இர்ஷானா(வயது34) என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்தது. இர்ஷானாவை திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த கும்பல் டாக்டரிடம் பேசியிருக்கிறது. இளம்பெண் என்பதால் அதற்கு டாக்டரும் சம்மதித்திருக்கிறார்.

    இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இர்ஷானாவின் சகோதரர் என்று அறிமுகமாக ஒரு நபர் உள்ளிட்டோர் கோழிக்கோட்டில் வைத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரையும் குடியமர்த்த வீடு பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    அதன்பேரில் டாக்டர் ரூ.5 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்டதும் டாக்டரை ஒரு மசூதி முன்பு விட்டு விட்டு இர்ஷானா உள்ளிட்ட அனைவரும் மாயமாகினர். அவர்கள் டாக்டரின் செல்போன், டேப் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டனர். அதன்பிறகே இர்ஷானா உள்ளிட்ட நபர்கள் திருமண மோசடியில் ஈடுபட்டதை டாக்டர் அறிந்தார்.

    தன்னிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி கோழிக்கோடு போலீசில் டாக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபிரசாத் தலைமையிலான போலீசார் மோசடி கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் திருமண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இர்ஷானா, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பல் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பறித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×