என் மலர்
முகப்பு » Martha Erika Alonso dies
நீங்கள் தேடியது "Martha Erika Alonso dies"
மெக்சிகோவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ உயிரிழந்தார். #MexicoGovernor #HelicopterCrash
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ மற்றும் அவரது கணவர் ரபேல் மொரினோ (முன்னாள் கவர்னர்) ஆகியோர் நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இந்த ஹெலிகாப்டர் மாநில தலைநகரை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் கவர்னர் மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் கவர்னர் மற்றும் அவரது கணவர் மறைவுக்கு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ராடர் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
பழமைவாத தேசிய செயல் கட்சியின் முக்கிய தலைவரான அலோன்சோ, கடந்த 14-ம் தேதிதான் கவர்னராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. #MexicoGovernor #HelicopterCrash
மெக்சிகோவின் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ மற்றும் அவரது கணவர் ரபேல் மொரினோ (முன்னாள் கவர்னர்) ஆகியோர் நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இந்த ஹெலிகாப்டர் மாநில தலைநகரை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் கவர்னர் மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரை ஓட்டிய பைலட் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

×
X