search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matt Dawson"

    • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார்.
    • இந்த வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் டாசனின் விரல் அகற்றப்படும்

    பாரிஸ்  ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30 வயதான ஹாக்கி வீரர் மாட் டாசன் [Matt Dawson]  தனது விரலை துண்டித்துக்கொள்ள மடுவெடுத்துள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. 117 பேர் கொண்ட அணியை இந்தியாவும்  அறிவித்துள்ளது.

    அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார். கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்சில் ஆஸ்திரேலேயே ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மாட் டாசன். இந்நிலையில்  விளையாட்டின்போது மேட் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டாசன் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் எழுந்தது.

     ஒன்று நீங்கள் உங்கள் விரல் குணமடையும் வரை விளையாடக்கூடாது அல்லது உங்கள் விரலை நீக்கியாக வேண்டும் என்று டாசனின் மருத்துவர் தெரிவிக்கவே, அவர் தனது விரலை அகற்றும் முடிவை எடுத்துள்ளார். 

    இந்த முடிவு குறித்து மாட் டாசன் பேசுகையில், இந்த வாய்ப்பு பாரிஸில் விளையாடுவதற்கானது மட்டுமல்ல, வாழ்கைக்கானது. பலர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவோ இழக்கின்றனர். நான் இழக்கப்போவது வெறும் விரலை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

     

    பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி அர்ஜென்டினா ஹாக்கி அணியை ஆஸ்திரேலிய அணி  எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×