search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matthew Wade"

    • ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ல் அறிமுகம் ஆன மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    கடைசியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

    ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது:-

    கடந்த டி20 உலகக் கோப்பையின் முடிவில் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான எனது நாட்கள் முடிந்துவிட்டதாக நான் முழுமையாக அறிந்தேன். என்னுடைய ஓய்வு மற்றும் பயற்சியாளர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோரிடம் கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை நடததி வந்தேன்.

    பயிற்சியாளர் என்பது எனது பார்வையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த வாய்ப்பு அளித்ததற்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன். பிக்பாஷ் உள்ளிட்ட பிரான்சிஸ் லீக் போட்டிகளில் விளையாடுவேன்.

    இவ்வாறு மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

    மேத் வேட் ஆஸ்திரேலிய அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக பணியாற்ற இருக்கிறார்.

    • டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.

    இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

    • 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
    • ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

    இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 17-வது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3-வது பந்தை மேத்யூ வேட் தூக்கி அடிக்க முயன்ற போது பேட்டில் டாப் எட்ஜாகி பவுலருக்கே கேட்ச்சாக சென்றது.


    ஒரு புறம் மார்க் வுட் தன்னிடம் வந்த கேட்ச்-ஐ பிடிப்பதற்காக முற்பட்டார். மற்றொருபுறம் மேத்யூ வேட் பாதி களத்திற்கு ரன் ஓட முயன்றுவிட்டு ரன் அவுட் ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார். அப்போது மார்க் வுட்டை கேட்ச் பிடிக்கவே விடாமல் இழுத்துப்பிடித்து தடுத்தார். இதனால் அந்த கேட்ச் மிஸ்ஸானது. இங்கிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்டனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

    பவுலர் கேட்ச் பிடிக்க சென்ற போது எப்படி ஒருவர் தடுத்து நிறுத்து முடியும். இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேத்யூ வேட் கேட்சை பிடிக்க விடாமல் தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×