என் மலர்
நீங்கள் தேடியது "McLaren"
- மெக்லாரென் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் ஹைப்பர்கார் 3.0 லிட்டர் டுவின் டர்போ V6 யூனிட் கொண்டுள்ளது.
- இதில் உள்ள 7.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி 31 கிமீ வரை செல்லும்.
பிரிட்டன் நாட்டு சூப்பர்கார் உற்பத்தியாளரான மெக்லாரென் இந்திய சந்தையில் புதிய அர்டுரா பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் அர்டுரா மாடலின் விலை ரூ. 5.1 கோடி, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வோகிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மெக்லாரென் நிறுவனத்தின் அர்டுரா, மூன்றாவது ஹைப்ரிட் கார் மாடல் இது ஆகும். P1 மற்றும் ஸ்பீடுடெயில் ஹைப்பர்கார் மாடல்கள் வரிசையில் புதிய அர்டுரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற இரண்டு ஹைப்பர்கார்களை போன்று இல்லாமல், புதிய அர்டுரா மாடலில் தான் முதல் முறையாக ஹைப்ரிட் பவர்டிரெயியன் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சக்திவாய்ந்த V7 இண்டர்னல் கம்பஷன் எஞ்சின் கொண்ட முதல் மெக்லாரென் கார் இது ஆகும். மெக்லாரென் அர்டுரா ஹைப்ரிட் செட்டப்-இல் 3.0 லிட்டர் டுவின் டர்போ V6 யூனிட் மற்றும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எஞ்சின் 577 ஹெச்பி பவர், 584 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதில உள்ள ஆக்சியல் ஃபிலக்ஸ் இ-மோட்டார் 93.8 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அர்டுராவில் உள்ள ஹைப்ரிட் பவர்டிரெயின் 671 ஹெச்பி பவர், 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஹைப்பர்கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும், 200 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கிலோமீட்டர்கள் ஆகும். புதிய மெக்லாரென் ஹைப்ரிட் மாடலில் உள்ள 7.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 31 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.
பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மெக்லாரென் 750S தற்போது இந்தியா வந்துள்ளது.
புதிய மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெக்லாரென் 750S மாடல் கூப் மற்றும் ஹார்டு-டாப் கன்வெர்டிபில் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த கார் 720S போன்றே காட்சியளிக்கிறது. புதிய 750S மாடலில் ரி-டிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் அளவில் பெரிய ஸ்ப்லிட்டர் கொண்ட ஏர் டேம்கள், புதிய வீல் ஆர்ச் வென்ட்கள், நீட்டிக்கப்பட்ட ரியர் டெக், அகலமான ஆக்டிவ் விங் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஃபுல் லப்பா லெதர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, போயர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மெக்லாரென் 750S மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ, வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 740 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும். புதிய 750S மாடல் முந்தைய 720S காரை விட 30 கிலோ குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- கடந்தாண்டு மெக்லாரென் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது.
- இதன் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகும்.
பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் 50 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மெக்லாரென் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது மெக்லாரென் 750S காரில் வந்தார்.
கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட மாதுரி தீட்சித் பல கோடி மதிப்பில்லா பல கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் மெக்லாரென் சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம் ஆகவும் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
