என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Medical Benefits"
- குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது.
- அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல.
இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது. இது அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல. காது குத்துவதற்கு பின்னால் நிரூபிக்கப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளன.
குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது. மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவும். அவ்வாறு காது குத்துவதற்கு முன்பு பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசிகள் முழுவதுமாக போட்ட பிறகுதான் காதுகுத்த வேண்டும். எனவே 1 முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு காது குத்துவது சரியானது. அதிக எடை கொண்ட காதணிகளைக் காட்டிலும், மெல்லிய, லேசான காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
காது குத்துவதற்கு முன்பு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது காதுகளில் துளையிட வேண்டாம். காது குத்தும்போது. குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப குழந்தைக்கு பிடித்த பொம்மைகளைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லவும். காது குத்துவதற்கு முன்னர் துளையிடும் இடத்தை ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் தோல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இதன்மூலம் கிருமித்தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொண்டு துளையிடுவது நல்லது, துளையிட பயன்படுத்தும் ஊசி அல்லது எந்திரத்தின் சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே காதில் துளையிட வேண்டும்.
காது குத்திய உடன் தங்கம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி காதணிகளை அணிவிப்பது நல்லது.
இந்த வகை உலோகங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தங்கம் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட, நிக்கல் கலக்காத உலோக காதணிகளை அணிவிக்கலாம். தொங்கும் வகையிலான காதணிகளை அணிவிப்பதைவிட, காதோடு ஒட்டி இருக்கும்படியான காதணிகளை அணிவித்தால் குழந்தைகள் இலகுவாக உணருவார்கள்.
இறுக்கமான காதணிகள் அணிவிப் பதையும் தவிர்க்க வேண்டும். காது குத்திய பின்பு ஒருசில நாட்கள் வரை, துளையிட்ட பகுதி சிவந்து காணப்படும். துளையிடப்பட்ட இடத்தில் இருந்து சீழ் அல்லது திரவம் வெளியேறினால். தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாக சிறிய கொப்புளங்கள் அல்லது துளையிடப்பட்ட பகுதிக்கு அருகில் பெரிய கொப்புளம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதன் மூலமும் தொற்று வெளிப்படும். காது குத்தப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும். அவ்வாறு காய்ச்சலோ, நோய்த்தொற்றோ இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காது குத்திய பிறகு துளையிட்ட பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமிநாசினியைப் பூசவும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ள சோப்பு கொண்டு காதுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் கழுவவும். காயம் குணமாகும் வரை குழந்தைகளுக்கு பொத்தான்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்துங்கள். இதனால் ஆடையை தலைக்கு மேல் இழுக்காமல் கழற்ற முடியும். ஆடை காதுகளில் பட்டு குழந்தைக்கு வலி உண்டாவதை தடுக்கவும் முடியும்.
தேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றிய போது, தேன் பானைகள் காணப்பட்டுள்ளன.
அதில் இருந்த தேன் நீண்ட காலமாக பாதுகாக்கபட்டவை என்றும், அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்கு கெடாமலும், மருத்துவத் தன்மை நிறைந்ததாகவும் வைத்திருக்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.
சுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்து நிறைந்தது. தேனின் ரசாயனக் கலவை, அதன் சுவை, காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தில் தேன் மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.
தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. அதில் மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தோன்றும், அவையும் எளிதில் இறந்துவிடும்.
தேன் பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணுயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது.
காயம் அல்லது தீக்காயத்தை குணமாக்க தேன் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால் தான் தேனுடன் மற்ற மருந்தை சாப்பிட கொடுக்கிறார்கள் .
இத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால், தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாரியில் வைத்தாலே போதும். இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை தேனும், தேனீக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்