search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mega 157"

    • சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    • மெகா 157 படத்தினை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    தற்போதைக்கு "மெகா 157" என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் வசிஸ்தா இயக்குகிறார். இந்த படம் ஃபேன்டசி பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    "மெகா 157" படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், பட அறிவிப்பிலேயே சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் "இந்த முறை, இது பிரபஞ்சத்தை மிஞ்சும் வகையில் மெகா மாஸ்-ஆக இருக்கும். ஐந்து சக்திகள் ஒன்றிணைந்து மெகாஸ்டார் ஆகிறது," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    இத்துடன் வெளியிடப்பட்டு இருக்கும் போஸ்டரில் ஐந்து சக்திகள்- நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் உள்ளிட்டவை ஆகும். இவை ஐந்தும் நட்சத்திர வடிவில் ஒன்றிணைந்துள்ளன. "மெகா 157" பட அறிவிப்பு வெளியாகி இருப்பதை ஒட்டி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்த படம் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    ×