என் மலர்
நீங்கள் தேடியது "Meghna Jambucha"
- ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் சேத்தன் சகாரியா.
- 2021-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் சேத்தன் சகாரியா. குஜராத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானார். அந்த தொடரில் இடம் பெற்று விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஆனால், ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்நிலையில் சேத்தன் சகாரியா மற்றும் மேகனா கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், கடந்த 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று சகாரியா பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.