என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menstrual Problems"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.
    • பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.

    மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் வரலாம்.

    சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதமும் இதேபோல் ஒரே சீராக வரும் என்று சொல்ல முடியாது.


    உடலில் ஹார்மோன்களின் சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.


    தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.

    மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான்.


    ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    மாதவிடாய் தள்ளிப்போட எடுக்கும் மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.

    உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.

    • இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது.
    • இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள்.



    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஆப்பிள் சீடர் வினிகர் முகப்பரு. நெஞ்செரிச்சல், தொப்பை கொழுப்புகளுக்கு அதிசய தீர்வாக இருக்கும். மாதவிடாயை தாமதப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் மீது தாக்கம் ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    இந்த ஆய்வு ஆப்பிள் சீடர் வினிகரானது ரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இயல்பான இனப்பெருக்க சுழற்சிகள் இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாக்கலாம் என்று கண்டறிந்துள்ளது.

    ஆப்பிள் சீடர் வினிகர் மாதவிடாயை தாமதப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதை நேரடியாக எடுக்க கூடாது. இது பற்கள் மற்றும் வாய் தொண்டையில் இருக்கும் மென்மையான திசுக்களில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும். அதனால் இதை எப்போது எடுத்துகொண்டாலும் தண்ணீரில் நீர்த்து எடுக்க வேண்டும்.

    உளுந்து

    மாதவிடாய் அறிக்கைகள் மூலம் மாதவிடாய் வருவதற்கு முன்பு உளுத்தம் பருப்பை வறுத்து பொடியாக்கி சாப்பிடுவது அதை தள்ளிபோட செய்யும் என்கிறது. ஆனால் இது குறித்து நிரூபனமான ஆராய்ச்சிகள் இல்லை. அதிகமாக இவை எடுத்துகொள்வதால் வயிறு உபாதை, மற்றும் வாய்வு உண்டாகும்.


    எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாறு ஆப்பிள் சீடர் சாறு போன்று அதிக அமிலத்தன்மை கொண்டது. சிட்ரஸ் பழங்கள் ரத்தப்போக்கை பின்னுக்கு தள்ளக் கூடும் என்று சொல்கிறது.

    அதிக அமிலம் உள்ள உணவுகள் உங்கள் பற்கள், ஈறுகள், வாய், தொண்டை, வயிறு மற்றும் குடல்களை எரிச்சலூட்டும். இந்த முறையில் நீங்கள் விரும்பினால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம்.


    ஜெலட்டின்

    ஊன்பசை என்று அழைக்கப்படும் இதை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பது மாதவிடாயின் தொடக்கத்தை சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதப்படுத்தலாம். உங்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டால் மீண்டும் இந்த சிகிச்சையை தொடங்க வேண்டும்.

    ஜெலட்டின் மாதவிடாய் தொடக்கத்தை தாமதப்படுத்துவதற்கு இயற்கை ஊக்குவியாக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக இல்லை. இதை ஆதரிக்க ஆராய்ச்சிகள் இல்லை. அதிக அளவு ஜெலட்டின் குடிப்பது செரிமான கோளாறு போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.


    தீவிரமான உடற்பயிற்சி

    தீவிரமான அல்லது அதிகமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதமாகலாம். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிக உடல் உழைப்பு அல்லது இயல்பாகவே அதிக உழைப்பு கொண்டவர்களுக்கு அது சரியான நேரத்தில் தொடங்குவதில்லை.

    உடற்பயிற்சி மற்றும் மீட்பு ஆகிய இரண்டுக்கும் உடல் ஆற்றல் பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியை நிறைவேற்றுவதற்கு ஆற்றல் இருப்பு இல்லாமல் இருக்கலாம் என்பதால் இந்த நிலை உண்டாகிறது., அதனால் தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மாதவிடாயை அடிக்கடி தவறவிடுகிறார்கள். ஒரு காலத்தை தாமதப்படுத்த உடற்பயிற்சி செய்தால் போதும் என்பதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாதவிடாய் தாமதப்படுத்த இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது. ஆனால் என்னவாக இருந்தாலும் அது குறித்து முழுமையான ஆராய்ச்சி தேவை. ஏனெனில் இயற்கை வைத்தியங்கள் பாதுகாப்பானதாக இருந்தாலும் ஆராய்ச்சிகள் அவை பயனுள்ளவை என்பதை நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள். தவிர்க்க முடியாத காலங்களில் மட்டுமே உங்கள் காலங்களை தள்ளிப்போடலாம். அதுவும் மருத்துவர் அறிவுறுத்திய அறிவுறுத்தலின் படி.


    முதலில் பெண்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலையில் செயல்படும் போது அதை தடுக்கும் வகையில் நாமே செயல்படுகிறோம். இது நல்லதல்ல. ஏனெனில் ஒவ்வொருவரது உடல் அமைப்பும், செயல்பாடும் மாறுபடும். இதை உங்கள் மருத்துவரால் மட்டுமே உணர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    மாதவிடாய் முன்னாடி வருவதற்கு அல்லது தாமதமாவதற்கு மாத்திரைகள் எடுத்து கொள்வது அதிலும் சுயமாக எடுத்துகொள்வது மோசமானது. இதை மருத்துவரிடம் ஆலோசித்தால் மருத்துவர் 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி அதற்கேற்ப அது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பரிந்துரைப்பார்கள். அது உங்கள் உடல் நிலை, காரணம், தாமதப்படுத்த வேண்டிய நாட்கள் போன்றவற்றை பொறுத்தது.

    அதோடு உங்கள் தேவைக்கேற்ப அது புரோஜெஸ்ட்ரோன் அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலந்து கொடுக்கப்படும். இதன் அளவு கூட்டி, குறைத்து உங்கள் தேவைக்கேற்ப மருத்துவரால் மட்டுமே வழங்கமுடியும். இனி மாதவிடாய் தாமதத்துக்கு மாத்திரைகள் போடும் போது உங்கள் உடல் மாற்றம் குறித்தும் யோசியுங்கள்.

    • கருவுறுதலுக்கு புரோஜெஸ்ட் டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம்.
    • ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.

    புரோஜெஸ்ட்டிரோன் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில், கருமுட்டை விடுப்பின் பின்னர் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் முதன்மை இனப்பெருக்க ஹார்மோன் ஆகும்.


    கருவுறுதலுக்கு இது மிகவும் அவசியம். அதனால் இதை கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். இது, ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.

    குறைவான புரோஜெஸ்ட்டிரோன் ஒரு பெண்ணின் இளமை பருவத்தில் அல்லது மாதவிடாய் முடிவதற்கு அதாவது மெனோபாசுக்கு முன்னர் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கும்.


    அறிகுறிகள்

    சராசரி மாதவிடாய் சுழற்சி 28-30 நாட்கள் ஆகும். 25 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய் சுழற்சிகள், ஒரேமாதத்தில் இருமுறை வருகிற மாதவிடாய், சிறிது சிறிதாக வரும் ஸ்பாட்டிங் போன்றவை குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறிக்கலாம். இதனால் கருப்பையில் எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை சரிவர பராமரிக்க முடியாது. எனவே ஸ்பாட்டிங் ஏற்படலாம்.


    புரோஜெஸ்ட்டிரோன் குறைவால் முதல் மூன்று மாத கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவு ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இதனால் கடுமையான ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை ஏற்படுகிறது.

    உணவுப் பழக்கவழக்கங்கள்

    புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

    ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். ஏனெனில் அவை இனப்பெருக்க ஹார்மோன்களுக்கான கட்டுமானத்திற்கு அத்தியாவசியமானது.


    அலிசி விதை (பிளாக் சீட்), ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, தேங்காய், பாதாம், பிரிம்ரோஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நல்லது.

    புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளும் உதவியாக இருக்கும்.

    மத்தி மீன், சால்மன், சூரை மீன், ஆட்டுக்கல்லீரல், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பருப்பு வகைகள், அவகேடோ, பெர்ரி பழங்கள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மனஅழுத்தம் புரோலாக்டின் மற்றும் கார்டிசோல் இரண்டையும் அதிகரிக்கலாம். இது கரு முட்டை வெளிவரும் போது புரோஜெஸ்ட்டிரோன் அளவை பாதிக்கும். சீரான உடற்பயிற்சி, யோகா, இறை தியானம் நல்ல பலனைத் தரும்.

    சித்த மருத்துவம்

    1) குமரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) சதாவரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    3) கல்யாண முருங்கை இலை, விஷ்ணுகிரந்தி, அசோகப்பட்டை, கரு நொச்சி, ஆலம் விழுது, கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் போன்ற மூலிகைகளில் செய்த ஏராளமான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

    • பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
    • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.

    மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.


    மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும். மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.


    பழங்கள்

    பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன அவை:

    * பெர்ரி

    * வாழைப்பழங்கள்

    * தர்பூசணிகள்

    * பப்பாளிகள்

    * ஆப்பிள்கள்

    * அத்திப்பழம்

    * ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்


    காய்கறிகள்

    வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:

    * ப்ரோக்கோலி

    * சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    * காலிஃபிளவர்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும்.

    * முழு தானியங்கள்

    * பீன்ஸ்

    * நட்ஸ்

    * விதைகள்

    கொழுப்பு மீன்

    கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். இதற்கு அதன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.

    * சால்மன் மீன்

    * சூரை மீன்

    * மத்தி மீன்கள்

    * கானாங்கெளுத்தி

    • பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம்.
    • மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மாதவிடாய்காலம் இயல்பானதாகத்தான் இருக்கிறதா அல்லது அதிக உதிரபோக்கை வெளியேற்றுகிறதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 30 முதல் 40 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை இழக்கிறார்கள்.

    உதிரபோக்கை சந்திக்கும் பெண்களுக்கு மெனரோஜியா என்னும் நிலை காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெண்ணுக்கு அதிக கனமான ரத்த போக்கை உண்டாக்குகிறது. இந்த அதிக உதிரபோக்கு இருக்கும் பெண்கள் இதை சமாளிக்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கூட நாப்கின், டேம்பன் மாற்றுகிறார்கள். சிலர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 நாப்கின்கள் வரை மாற்றுகிறார்கள்.

    அதிக ரத்தப்போக்கிற்கான அறிகுறிகள்:

    * ஒரு பெண் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நாப்கின் பயன்படுத்துவது. அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாப்கீனை பயன்படுத்துவது.

    * மாதவிடாய் நாட்கள் வழக்கத்தை விட அதிக நாட்கள் நீண்டு இருப்பது.

    * மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டிகளாக வெளியேறுவது.

    * அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வழக்கத்தை விட அதிக உடல் சோர்வு.


    அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்:

    இளம் வயதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஈஸ்ட்ரோஜெனுக்கும், புரோஸ்ட்ரோஜென்னுக்கும் இடையில் உண்டாகும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

    இளம் பருவத்தில் கருப்பை செயலிழப்பு, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் அதிக உதிரப்போக்கை உண்டாக்குகிறது.

    கருப்பை நோய் இருந்தாலும் அல்லது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

    மேலும் ஹைப்போதைராய்டிசம் தைராய்டு பிரச்சனைகள் இருந்தாலும் உதிரபோக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

    மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இதில், பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாத ஆறு மாதவிடாய் கோளாறுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தீவிர பிடிப்பு காரணமாக தாங்கமுடியாத வலி உண்டாகும். இதற்கு “endometriosis” எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். Endometriosis என்பது கருப்பையில் வளரும் செல்கள், கருப்பை வெளிப்புற சுவரில் வளர துவங்குவது ஆகும். இதனால் அதிக வலி உண்டாகும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி உண்டாவது இதற்கான அறிகுறியாக இருக்கிறது.
     
    மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாட்கள் அதிக இரத்த போக்கு உண்டாகும். கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போதிலும் கூட அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஆனால், நீங்கள் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அல்லது புற்றுநோய் செல் வளர்ச்சியின் ஆரம்பம் கூட அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணியாக இருக்கலாம்.

    மாதவிடாய் நாட்கள் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்ற மருத்துவ நிலையின் காரணமாக இருக்கலாம். இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.
     
    சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மூட் ஸ்விங்ஸ், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகர்யத்திற்கு ஆளாவீர்கள்.
     
    சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள். நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பல மருத்துவ நிலைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
     
    கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைராயிடு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட்டில் கோளாறு, அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
     
    ×