என் மலர்
நீங்கள் தேடியது "mental health problem"
- உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
- பெண்கள் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"DEPRESSION" நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வு, சிந்தனை மற்றும் செயலை பாதிக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் வீட்டில் அல்லது வேலையில் சரியாகச் செயல்படுவதற்கான திறனை உங்களில் இருந்து தடுக்கும்.
முதல்படி
அதிலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்கள் வாழ்நாளில் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பொதுவான மனநல கோளாறு. இந்த மனநல கோளாறு தற்கொலைக்கு வழிவகுக்கும். இது பொதுவாக உங்களின் வேலை, தூக்கம், படிப்பு மற்றும் சாப்பிடும் திறனில் தலையிடுகிறது. இந்த அறிகுறிகள் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும்.
இரண்டாம் படி
இது டிஸ்டிமியா என்றும் அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் கடுமையானவை அல்ல மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும்.

அறிகுறிகள்
உதவியற்றதாக உணர்தல்
ஆர்வமின்மை
அதிக தூக்கமின்மை
எரிச்சல்
எடை மாற்றங்கள்
ஆற்றல் இழப்பு
பொறுப்பற்ற செயல்கள்
தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி
சுய வெறுப்பு
அமைதியின்மை
குறைவான சிந்தனை
அதிகம் பேசுதல்
ஆளுமை மாற்றங்கள்
நினைவக சிரமங்கள்
உடல் வலி
சோர்வு
பசியிழப்பு
உடலுறவில் ஆர்வம் இழப்பு
இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு என்று செல்லகூடாது. எப்போது செல்ல வேண்டும் என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் அதிகரித்து உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைத்தியசாலை செல்வதற்கு மனம் இல்லை என்றால், உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பேசவும். இவ்வாறு செய்தாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனிமையில் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் உருவாகும்.
- மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.

தனிமையின் அறிகுறிகள்
* தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு
* தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு
* தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு
* நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு
* உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு
பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசவுகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.
தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தனிமையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....

அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்
தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.

நன்றி கூறுங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.
தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.

இசையை ரசியுங்கள்
தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.

இயற்கையோடு இணையுங்கள்
வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.
இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உணர்வுகளை வழிநடத்துங்கள்
கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.

செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.
