என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Merit Ceremony
நீங்கள் தேடியது "Merit Ceremony"
- செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தனித்திறன் விழா நடந்தது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி யும், லயன்ஸ் கிளப் காரைக்குடி சிட்டி இணைந்து மழலையர் விழா நடத்தியது. இந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் சத்தியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் சுபாஷினி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கிளப் காரைக்குடி சிட்டி மாவட்ட தலைவர் சசிக்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேராசிரியர் ஜானகிராமன், லயன்ஸ் கிளப் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாதம்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் முதல் வர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
×
X