என் மலர்
நீங்கள் தேடியது "MET Update"
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்.
- சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும். தற்போது தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுவையில் இருந்து 420 கிலோமீட்டர், நாகையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது நவம்பர் 30 ஆம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யாமல் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிகமாக புயல் உருவாக கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாகே தமிழகத்தில் கரையை கடக்கும். தற்காலிக புயலாக மாறியபின் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். நவம்பர் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும்," என்று தெரிவித்தார்.
- கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு இருந்தது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததை ஒட்டி ஒன்பது துறைமுகங்களில் ஏற்றபட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
- மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
- தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மரக்காணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
விழுப்புரத்தைத் தொடர்ந்து மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகரந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.
- ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று (நவம்பர் 30) நள்ளிரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், புயல் கரையை கடந்த புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் சூறைக் காற்றும் வீசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- புயல் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும் போது..,
"ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க துவங்கியது. நேற்றிரவு (நவம்பர் 30) 10.30 மணி முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடந்தது. இது தொடர்ந்து புதுச்சேரி அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் இந்த புயல் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது."
"கடந்த மூன்று மணி நேரத்தில் இந்த புயல் பெரும்பாலும் நகராமலேயே உள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்."
"இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அதிகனமழையும், ஆறு இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது."
"புதுச்சேரியில் 46 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி புதுச்சேரியில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது," என்று தெரிவித்தார்.
- இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
- கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிசம்பர் 10) துவங்கி நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதே போல் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.
நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
- 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
- சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது.
- ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை என ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- மாணவர்கள் பாதுகாப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பத்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரியலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.