search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam youth suicide"

    மேட்டுப்பாளையத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பொறையார் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது28). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை காந்தி திருநல்லூர் சந்திரா (40) என்பவர் வீட்டில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக பூபதி மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தார். பூபதிக்கு சந்திரா உதவியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பூபதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று பூபதி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலை அருகே உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் பூபதி தூக்குபோட்டு பிணமாக தொங்கினார்.

    இதனையறிந்த சந்திரா இதுகுறித்து மேட்டுபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், ஏட்டு சக்திமுருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து பூபதியின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×