என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MI New York"
- மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் முன்னேறியுள்ளது.
- தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து பொல்லார்ட் ஆறுதல் கூறினார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்சரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.
இதனையடுத்து போட்டி முடிந்து பொல்லார்ட், தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர்.
- எம்.ஐ அணியின் கேப்டன் பூரன் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர், களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Haarcb fans and franchise will forever beg for even one of these moments life time and will never get one ??#MINewYork #MLC2023 #MLCFinal #nicholaspooran pic.twitter.com/YRfYptaQD9
— Arihant Mishra (@Michael37791229) July 31, 2023
எம்.ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பினாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
- 17 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் டி20 என்ற புதிய கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் கேப்டன் டு பிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 74 ரன்கள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய எம்ஐ அணிக்கு ஆரம்பத்திலேயே மோனக் படேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ஸ்டீவன் டெய்லர் 15 (21) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார். அதைவிட அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானும் தடுமாற்றமாகவே செயல்பட்டு 19 (15) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.
அடுத்து வந்த கேப்டன் பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் மிகப்பெரிய அழுத்தத்திற்குள்ளான அந்த அணிக்கு கடைசி நேரத்தில் டிம் டேவிட் 24 (19) ஹமத் அசாம் 13 (12) ரசித் கான் 13* (9) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.
டெக்சாஸ் அணி 20 ஓவர்களில் எம்ஐ அணியை 137/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்சாஸ் சார்பில் அதிகபட்சமாக முகமது மோசின் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்