என் மலர்
நீங்கள் தேடியது "Miami Open"
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
- இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மியாமி:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜாகுப் மென்சிக் 7-6 (7-4) மற்றும் 7-6 (7-4 ) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக மென்சிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.
- சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பயோலினி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற சாதனையை ஜாஸ்மின் பயோலினி படைத்துள்ளார்.
- ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையிடம் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.இதில் ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இதில் பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட்டுடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார். இதில் கோகோ காப் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர்.
- சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
புளோரிடா:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் காலின்ஸ் (அமெரிக்கா), சொரானா மிஹேலா (ருமேனியா) உடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-4, 7-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் சக்காரி (கிரீஸ்), மசரோவா (சுவிட்சர்லாந்து), ஓன்ஸ் ஜபியர் (துனிசியா), லினெட்(போலந்து) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
- ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி:
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஜப்பானின் நவாமி ஒசாகா, ரஷ்யாவின் லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ் வீராங்கனை ரெபேக்கா மசரோவா குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர். இதில் மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- மற்ற ஆட்டங்களில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்) மக்டா லினெட்( போலந்து), கோகோ காப்(அமெரிக்கா) ஜெலினா ஒஸ்டா பென்சோ (லாத்வியா) ஆகியோரும் 3-வது சுற்று தகுதி பெற்றனர்.
- இன்று நடந்த பெண்கள் ஒன்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அசரென்கா, கமிலா ஜியோர்ஜியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒன்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலை வீராங்கனையான அசரென்கா(பெலாரஸ்) 6-3,6-1 என்ற நேர்செட் களத்தில் கமிலா ஜியோர்ஜியை (இத்தாலி) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்) மக்டா லினெட்( போலந்து), கோகோ காப்(அமெரிக்கா) ஜெலினா ஒஸ்டா பென்சோ (லாத்வியா) ஆகியோரும் 3-வது சுற்று தகுதி பெற்றனர்.
- அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.
முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.
இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் ரிபாகினா வென்றார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, டென்மார்க்கின் கிளாரா டாசனுடன் மோதினார்.
இதில் ரிபாகினா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 7-5, 6-4 என செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சுடன் மோதினார். இதில் அசரென்கா 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.
- முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சபலென்கா 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
- போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
- 2-வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6 எனக் கைப்பற்றியது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.
போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.
போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.
2-வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.
- முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
- 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.
மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.
இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.
முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.
3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.