என் மலர்
நீங்கள் தேடியது "Miami Open"
- மெட்வதேவ் காலிறுதியில் 6-2, 7(9)-6(7) என நேர்செட் கணக்கில் நிக்கோலஸ் ஜார்ரியை வீழ்த்தினார்.
- சின்னர் தாமஸ் மக்காச்-ஐ 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மியாமி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 நிலை வீரரான டேனில் மெட்வதேவ், நிக்கோலஸ் ஜார்ரி-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மெட்வதேவ் 6-2 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கைப்பற்ற கடுமையான போராட வேண்டியிருந்தது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை மெட்வதேவ் 7(9)-6(7) எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 (6-2, 7(9)-6(7)) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜென்னிக் சின்னர்- தாமஸ் மக்காச்-ஐ எதிர்கொண்டார். இதில் 2-ம் நிலை வீரரான சின்னர் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் மெட்வதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- மரோஸ்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள்.
- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா வென்றார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் எகடரின் அலெக்சாண்ட்ரோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரொவா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 6-4, 6-4 என செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
- 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும்.
மியாமி ஓபனில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டியா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
துபாய் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32-ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேலும், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும். மேலும், மியாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63-வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
போபண்ணா- எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறது. லியாண்டர் பயேஸ்க்குப் பிறகு அனைத்து வகையிலான 9 ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.
- அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
- மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
மியாமி:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
இதில் ரைபகினா 6-4, 0-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
இதில் காலின்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 31-ந் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரைபகினா-காலின்ஸ் பலப்பரீட்சை நடத்து கிறார்கள்.
நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) , ஸ்வெரேவ் (ஜெர்மனி)-டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.
- மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் எலீனா ரிபாகினா, டேனியல் காலின்ஸ் மோதினர்.
- இந்தப் போட்டியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மியாமி:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.