என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mic"

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது
    • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.

    சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த 40 தொகுதிகளில் போட்டியிடுபவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள் . சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார்.

     

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை கொடுத்துவிட்டு, ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

     

    • ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
    • திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

    திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சீமான், " விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன். வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்" என்றார்.

    விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பை 'பணக்கொழுப்பு' என விமர்சித்திருந்த சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலிடி அளித்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

    ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

    திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

    அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

    பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.

    ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×