என் மலர்
நீங்கள் தேடியது "michael clarke"
- கிளார்க், கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லை.
- கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
18-வது ஐபிஎல் சீசன் தொடரானது வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப்களுக்கு முன்னேறும். இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லாதது அவர்களது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
- அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடிக்கும்.
- அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.
அண்மையில் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பலரும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சரியில்லை என கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் எனக்கு பிடிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது என்பதாலயே ரோகித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்க சரியான ஆள் இல்லை என கூற முடியாது.
ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டன். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடிக்கும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
- ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார் என கிளார்க் கூறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில் பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களம் இறக்கவும் ஆலோசிக்கிறார்கள்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்கினால் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார். அவர் ஒரு சிறந்த வீரர்.
ஸ்மித் தொடக்க வீரராக விளையாடும் பட்சத்தில் அவர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த லாராவின் 400 ரன் சாதனையை முறியடித்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம். அந்த சாதனையை படைக்க ஸ்மித் தகுதி உள்ளவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்மித், டெஸ்ட் போட்டியில் தற்போது 4-வது வீரராக களம் இறங்கி வருகிறார். 105 போட்டியில் 9514 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதங்கள், 40 அரை சதங்கள் அடித்துள்ளார்.
4-வது வரிசையில் களம் இறங்கி 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 61.51 சதவீதம் ஆகும். 3-வது வரிசையில் 11 முறை களம் இறங்கி 1744 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் சாதனை அசாதாரணமானது.
- இந்தியாவை விட ஆஸ்திரேலிய மண்ணில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோலி ரன்வேட்டை நடத்தினால் இந்தியா தொடரை வெல்லும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னால் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் சாதனை அசாதாரணமானது. இன்னும் சொல்லப்போனால் அவர் இந்தியாவை விட ஆஸ்திரேலிய மண்ணில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்டுகளில் ஆடி 6 சதங்கள் அடித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால், அதிக ரன் குவிக்கும் வீரராக விராட் கோலி இருக்க வேண்டும். அவருடன் ரிஷப் பண்டும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டும்' என்றார்.
- பல வீரர்கள் இது போல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள்.
- ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும்.
மும்பை:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் மோசமான வகையில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா தொடரில் மொத்தமாகவே அவர் 5 இன்னிங்ஸ் விளையாடி 31 ரன்கள் தான் எடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரோகித் சர்மா மூன்று தொடர்களிலும் சேர்த்து 164 ரன்கள் அடித்திருக்கிறார். இது அவருடைய பேட்டிங் சராசரி 10 என்ற அளவில் இருக்கின்றது.
மேலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல வீரர்கள் இதுபோல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மாவின் கடைசி பத்து இன்னிங்ஸ் டெஸ்ட் ஸ்கோரை பார்த்தால் பெரிதாக இல்லை. பல வீரர்கள் இது போல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள். மற்ற சிலருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை ரோகித் சர்மாவிடமே விட்டுவிட வேண்டும்.
ஒரு கேப்டனாக அந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும். நிச்சயமாக ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஸ்கோர்கள் பெரிய அளவில் இல்லை. எனினும் சிட்னி டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசியாக இருக்காது என்று நினைக்கின்றேன்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரோகித் சர்மா என்ன முடிவை எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேலை கேப்டன் பதவியில் இருந்து போவாரா என்றும் சொல்ல முடியாது.
என்று கிளார்க் கூறியுள்ளார்.
- 2 முறை கவர் ட்ரைவ் அடித்து ஆட்டம் இழந்ததால் சச்சின், சரி சிட்னியில் நான் இரட்டை சதம் அடிப்பேன் என்று கூறிவிட்டு அடித்தார்.
- விராட் கோலியை விட சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 190 ரன்கள் தான் சேர்த்தார்.
இதனால் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி களத்தில் இருந்தாலே அது இந்திய அணிக்கு மதிப்பை தான் கொடுக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி நாளைய டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து விடுவார். அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். கோலி நன்றாக விளையாடக் கூடியவர். அவர் எப்போது எனக்கு போதும் என்று முடிவு எடுக்கிறாரோ அதுவரை அவர் விளையாட வேண்டும்.
திடீரென்று விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அது ஒரே ஒரு அணிக்கு தான் இழப்பு. அது இந்தியா தான்! விராட் கோலி இருக்கும் அணியில் நான் கேப்டனாக இருந்தால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை என்றாலும் நான் அவர் எனது அணியில் இருக்க வேண்டும் என தேர்வு குழுவினரிடம் சண்டை போடுவேன்.
பலரும் சச்சினின் சிட்னியில் இரட்டை சதம் அடித்தது குறித்து பேசுகிறார்கள். ஆனால் விராட் கோலியை விட சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர். அந்த தொடரில் இரண்டு முறை கவர் ட்ரைவ் அடித்து ஆட்டம் இழந்ததால் சச்சின், சரி சிட்னியில் நான் இரட்டை சதம் அடிப்பேன் என்று கூறிவிட்டு அடித்தார். எனவே சச்சினை யாருடனும் ஒப்பிட முடியாது.
விராட் கோலியின் பலமே பந்து பேட்டில் படுவதுதான். கோலியும் வித்தியாசமாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். விராட் கோலி பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் களத்தில் இருந்தாலே அது இந்திய அணிக்கு மதிப்பை தான் கொடுக்கும். எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க விராட் கோலி நல்ல பிளான்களை வழங்குவார்.
என்று கிளார்க் கூறினார்.
- சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர்.
- 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64-வது நபராக ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் விழா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார். சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56-க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க். 43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5 என ஆஷஸ் தொடரினையும் 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.
- இறுதிபோட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் எந்த இரண்டு அணிகள் இறுதிபோட்டியில் மோதும் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் எனவும் இதில் 1 ரன்னில் இந்தியா வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்.
இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒருநாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மேலும் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி ஆவார். பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பாபர் ஆசம் ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை (21 போட்டி) கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தற்போது தடையை அனுபவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. மைதானத்திலும், வெளியிலும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
வழக்கமாக ஆஸ்திரேலிய அணியினர், எதிரணியுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு சீண்டுவது உண்டு. இதனால் எதிரணி வீரர்கள் கோபத்தில் தவறு செய்வார்கள், அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது அவர்கள் சற்று சாந்தமாக ஆடுவது போல் தோன்றுகிறது. இது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை எரிச்சலூட்டியுள்ளது.
இது தொடர்பாக கிளார்க் நேற்று அளித்த பேட்டியில் ‘மற்றவர்கள் நம்மை விரும்புவார்களா? இல்லையா? என்ற கவலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் விட்டுவிட வேண்டும். மாறாக மதிக்கத்தக்க அணியாக இருக்க வேண்டும். அதன் மீது தான் நம் கவலை இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ? ஆக்ரோஷமாகவும், கடினமான முறையிலும் விளையாடுவது தான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை. அது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இந்த பாணியில் இருந்து வெளியேறி, மென்மையான போக்கை கடைபிடித்தால் உலகில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கும். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது. எல்லோரும் வெற்றியைத்தான் விரும்புகிறார்கள்’ என்றார்.
‘எதிரணி வீரர்களுடன் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டதை நினைத்து நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஸ்டீவ்வாக் போன்ற வீரர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்’ என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.
கிளார்க்கின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எதிரணியினர் எங்களை விரும்ப வேண்டும் என்று நாங்கள் விவாதிக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை ரசிகர்கள் நேசிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் பேசுகிறோம். மற்றபடி எதிரணி எங்களை விரும்புகிறார்களா? இல்லையா? என்பது பற்றி சிறிது கூட கவலையில்லை. மைக்கேல் கிளார்க் கூறுவது போல் தான், நாங்கள் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் வரிந்து கட்டி நிற்கப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் மிக கடினமாக போராடினோம். அதே போன்று தொடர்ந்து ஆடுவோம். ஹேசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற மூத்த வீரர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும்’ என்றார்.
இதற்கிடையே மைக்கேல் கிளார்க்குக்கு எதிராக குரல் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நாம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டோம் என்பதை கிளார்க் மறந்து விட்டார். தவறுகளை திருத்திக்கொண்டு முடிந்த வரைக்கும் சீக்கிரமாக ஆஸ்திரேலிய அணி மீதான நல்லெண்ணத்தை மீட்டெடுக்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #MichaelClarke #AUSvIND