search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mike Johnson"

    • குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.
    • புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது. இதனால் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.

    கெவின் மெக்கார்த்தி, ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர்.

    புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சபாநாயகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது. இதற்கிடையே குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் தேர்வுக்கான ஓட்டெப்பில் மைக் ஜான்சன் 220 வாக்குகள் பெற்றார். எதிராக 209 வாக்குகள் விழுந்தது. இதனால் மைக் ஜான்சன், பாராளுமன்ற பிரநிதிநிதிகள் சபை சபாநாயராக வெற்றி பெற்றார்.

    ×