என் மலர்
நீங்கள் தேடியது "militants dead"
- வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் ஐ.எஸ், அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன்:
மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்க ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரம் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes
காபுல்:

இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக கஸ்னி மாகாணத்துக்கு உட்பட்ட அன்டார் மற்றும் காராபாக் மாவட்டங்களில் உள்ள தலிபான்கள் பதுங்குமிடங்களின் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.