search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minibus"

    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • கருணா என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் புனித இஞ்ஞாசியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ், மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    வழக்கம் போல் இன்று காலையும் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ்சித்தார், மூன்று ரோடு, சேவானூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பள்ளி பஸ் அம்மாபேட்டை அருகே உள்ள சாரி கொட்டாய் என்ற இடம் அருகே இன்று காலை 8.30மணியளவில் வந்த போது சேவானூர் தழுக்கனூர் பகுதியை சேர்ந்த கருணா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    பின்னர் மயக்கம் அடை ந்த மாணவன் கருணாவை சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பாதி மாணவ, மாணவிகள் மினிபஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 முறை மாணவ, மாணவிகளை மினி பஸ் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தின் அருகே மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகினர். #RussiaMinibusFire
    ஏகடெரின்பர்க்:

    ரஷிய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

    மினி பேருந்தினுள் 2 எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எரிவாயு உபகரணங்கள் செயலிழந்ததால் பேருந்து தீப்பிடித்தபோது, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததாக உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.  இதில் 9 பேர் பலியாகினர்.  6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரைக் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #RussiaMinibusFire
    ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற மினி பஸ் இன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuSrinagar #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.



    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #JammuSrinagar #Accident 
    வியட்னாமில் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த மணமகன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். #Vietnam #BusAccident
    ஹனோய்:

    வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Vietnam #BusAccident
    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் லாரி மீது மினி பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்வட் பகுதியில் இன்று அதிகாலை லாரி மீது மினி பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ்சானது மத்தியப்பிரதேசம் மாநிலம் தானே மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×