என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister M. P. Saminathan"
- 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.
- கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காங்கயம் :
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தோ்தல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் 78 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது .
- முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ. 101 கோடி மதிப்பீட்டில் 1036 பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் படிப்படியாக மக்களின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேம்படுத்தப்படும் எனவும் 21 மாநகராட்சிகளில் திருப்பூர் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாநில செய்தி துறை அமைச்சர் மு .பெ .சாமிநாதன், அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல்திவேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்