என் மலர்
நீங்கள் தேடியது "Minister Nassar"
- ஒரு சில சங்கங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
- வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது என்றார் அமைச்சர் நாசர்.
சென்னை:
ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும், ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என்றும் பால் உறுத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். ஒரு சில சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பால்தட்டுப்பாடு இருக்காது என தெரிவித்துள்ளார்.