என் மலர்
நீங்கள் தேடியது "Ministry of Home Affairs"
- டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
- தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது
கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.
அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.
நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.
விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.
- ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
வெள்ள நிவாரண நிதியாக 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி என கூறிய நிலையில் தற்போது பேரிடர் நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை.
தேசிய நிவாரண நிதியிலிருந்து தொகை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அரசு ஒரு அரணாக உள்ளதாக பதிவிட்டு பேரிடர் நிதி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.

சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்தது மற்றும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். நிலைமையை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உள்துறைக்கு கவர்னர் திரிபாதி ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளார். #CBI #WestBengalGovernor
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

நதியா மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முர்ஷிதாபாத் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பல கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் வன்முறையை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேர்தலின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PanchayatElection #Pollviolence