என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministry of Railways"

    • அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
    • அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.

    ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.

    ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

    விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ரெயில் நிலையங்களில் வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.

    நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும்.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள் மற்றம் வணிக நிறுவனங்களை அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.

    ரெயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை ரெயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.
    • விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம்.

    ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட உட்கார்ந்தபடி பயணம் செய்யக்கூடிய சாமான்கள் ஏற்றிச்செல்லும் (எஸ்எல்ஆர்) கோச்சில் விலங்குகள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம் என்றும் இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் ரெயில்வே வாரியம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது.
    • ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது

    இழப்பீடு

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டநெரிசலுக்கு ரெயில்வே துறையின் தோல்வியே காரணம் என மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    'உயர்மட்ட' விசாரணை

    இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகளின் திடீர் அதிகரிப்பு பீதியை ஏற்படுத்தியது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட ரெயில் நிலையத்தில் நிலவிய பல்வேறு குளறுபடிகளே காரணம் என சம்பவத்தை நெரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

     தாமதமான ரெயில்கள்

    மகா கும்பமேளாவிற்குச் செல்ல, ரெயில்களில் ஏற கூட்டம் கூடியிருந்தது. பிரயாக்ராஜ் செல்லும்  ரெயில்கள் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமடைந்து கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.

    பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி தாமதமாக வந்தன. ரெயில்களில் ஏறுவதற்காக பயணிகள், 12,13, 14வது நடைமேடையில் கூடியிருந்தனர்.

    ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் போர்ட்டர் (கூலி) ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 12வது பிளாட்பார்மில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் 16வது பிளாட்பார்மிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    எனவே பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது. மக்கள் ஒருவரை ஒருவர் மோதத் தொடங்கி எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் விழுந்தனர். நான் 1981 முதல் கூலியாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற கூட்டத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.

     

    தடுக்கப்பட்ட படிக்கட்டுகள்:

    கூட்டத்தை நிர்வகிக்க 14 மற்றும் 15வது பிளாட்பார்ம்களில் ஒரு படிக்கட்டு அடைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் தாமதம் தொடர்ந்ததால், படிக்கட்டுகளில் அதிகமான பயணிகள் கூடத் தொடங்கினர்.

    நெரிசல் அதிகமாகி, மக்கள் ரெயிலில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை நோக்கி முன்னே இருப்பவர்களை தள்ளினர். அந்தத் தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நடைமேடையில் கூட்டம் அதிகரித்ததால் மற்றவர்கள் மூச்சுத் திணறினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு மணி நேரத்துக்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை:

    ரெயில்வே தலைமை வணிக மேலாளர் கூற்றுப்படி, ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது. இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் காணப்பட்டது. நடைமேடை எண். 14 மற்றும் நடைமேடை எண். 16 அருகே உள்ள எஸ்கலேட்டர் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ×