என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minor girl"

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது19). இவர் போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    பின்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி மற்றும் மைனர் பெண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சோழவந்தானை சேர்ந்த 15 வயதுடைய மைனர் பெண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் திடீர் என மாயமானார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை.

    இதுகுறித்து அவர்கள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளிடம் திருமண ஆசைவார்த்தை கூறி எங்கள் பகுதியை சேர்ந்த சபரிமுத்து (19) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து எங்களது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவளை கடத்தியவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகள் சினேகா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் காடுபட்டி போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளை எங்கள் பகுதியில் வசிக்கும் நந்தீஸ்வரன் மகன் மதன் (25) என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடும்பப்பிரச்சனை காரணமாக 16 வயது சிறுமியை வளர்ப்புத்தாய் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #stepmother #Minorgirl
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷோகின். இவருக்கு ஷாமின் என்ற 16 வயது மகள் உள்ளார். ஷோகின் சிதாரா பேகம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
          
    இந்நிலையில், நேற்று ஷாம்னுக்கும், அவரது வளர்ப்புத்தாய் பேகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துக்கொண்டனர். சண்டை முற்றிய நிலையில், பேகம் தனது வளர்ப்பு மகளை கொடூரமாக அடித்துக்கொன்றார். இதற்கு ஷோகினும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இக்கொலை குறித்து ஷாம்னியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேகம் மற்றும் அவரது கணவர் ஷோகின் இருவரையும் கைது செய்தனர். இக்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #stepmother #Minorgirl
    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் செக்யூரிட்டி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் கடந்த 15-ம் தேதி மருந்து வாங்க 15 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாவலர் அவரது 2 நண்பர்களின் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து வாகனம் மூலம் டோம்பிவிலி பகுதிக்கு பின்னால் உள்ள குடிசைப் பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலை வீடு வந்து சேர்ந்த சிறுமி அவரது பெற்றோருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #pocso
    ×